டெல்லியில் தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் முந்தைய இந்திய பிரதமர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அருங்காட்சியகம் ரூ.271 கோடி செலவில் 10,975.36 ச. மீ., பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளே வியக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மியூசியதில், முன்னாள் பிரதமர்களின் சிலைகள் உயிருடன் உள்ள சிலைகளைப்போல அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பிரதமர்களின் வாழ்க்கை மற்றும் பிரதமர்கள் பயன்படுத்திய பொருட்கள் எழுதிய அறிய கடிதங்கள் போன்றவைகளும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியப் பிரதமர்களாக பதவி வகித்த 14 பேர் பற்றிய குறிப்புகள் இந்த மியூசியத்தல் இடம்பெற்றுள்ளது. மேலும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம், அப்போதைய பிரதமர்களுடன் செல்ஃபி எடுப்பது போன்ற அனுபவத்தை தரும் வகையில் விரர்சுவல் ரியாலிட்டியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர்கள் குறித்த விவரங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்தைத் தொடங்கி வைத்து முதல் டிக்கெட்டையும் பெற்று உள்ளே நுழைந்து பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பிரதமர்கள் வாழ்க்கை வரலாறு அடங்கிய அருங்காட்சியகம்: டெல்லியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
