“பிரதமரை கொலைகாரன் என்று கூறும் திருமாவளவன் ஒரு தேச விரோதி” வேலூர் இப்ராஹிம் பேட்டி

இந்திய மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் கொரோனா தடுப்பூசியின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது அதனை கொண்டாடும் வகையில் பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில்  கோவை அரசு  கல்லூரி  மருத்துவமனை டீன் நிர்மலா அவர்களுக்கும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.‌ நிகழ்ச்சியில் பாஜக சிறுபான்மை அணி  தேசியச் செயலாளர் வேலூர் இப்ராகிம் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கினார் .அவருடன் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஜி.கே. செல்வகுமார்,மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்,மாவட்ட தலைவர் நந்தகுமார்,மாவட்ட துணை தலைவர் மதன் மோகன் மாவட்ட பொது செயலாளர் ரமேஷ் குமார்,மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளர் கணபதி ஜான்சன். மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு முன்பு பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக சிறுபான்மை அணி  தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசுகையில்
கழிவு நீர் வீடுகளுக்குள் புகும் பிரச்சனை சரி செய்யப்படாவிட்டால் மாநகராட்சி முற்றுகையிடப்படும் என எச்சரிக்கை – பாஜக சிறுபான்மை அணி  தேசியச் செயலாளர் வேலூர் இப்ராகிம் !! கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்கம் பகுதி அருகே உள்ள தியாகி சிவராம் நகர் பகுதியில் கழிவு நீர் வீடுகளுக்குள் புகும் பிரச்சனை உள்ளது. இதுவரை இப்பிரச்சனையை திமுக அரசாங்கம் செய்யவில்லை, இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு தேவை பிரச்சனை சரி செய்யப்படாவிட்டால் மாநகராட்சி முற்றுகையிடப்படும் என எச்சரிக்கை.ஏழை இஸ்லாமிய குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிப்பதற்கான உதவியை கோவை மாவட்ட பாஜக செய்துள்ளது என்ற அவர், தொடர்ந்து இஸ்லாமியர்களின் வாழ்வாதாரம் காப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.பணியிட மாற்றம் பணியிடை நீக்கம் உள்ளிட்ட செயல்பாடுகளால் அரசு ஊழியர்களின் எதிர்ப்பை திமுக அரசு பெற்றுள்ளது என்று கூறிய அவர், தற்போது காவல்துறையின் மூலம் அத்துமீறும் அரசாக திமுக அரசாங்கம் இருக்கிறது என்றார். மேலும், திமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் சீர்கெட்டு போயிருக்கிறது, காவல்துறையை வைத்து என்னை மிரட்டுகிறார்கள் தர்காவிற்கு செல்லும் போது என்னை வழிமறித்து கைது செய்கிறார்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று குற்றம்சாட்டினார்.கோவிலில் உள்ள தங்க நகைகளை விற்கும் திட்டத்தால் பல்வேறு ஊழல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயலில் திமுக அரசாங்கம் ஈடுபடுகிறது.திருமாவளவனை திருநங்கைகளோடு கூட ஒப்பிட முடியாது. பிரதமரை கொலைகாரன் என்று கூறும் இவர்கள் தேச விரோதிகள்.மின்சார வாரியம் குறித்து மாநிலத் தலைவர்‌ அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாதவை அல்ல.ஆதாரம் இல்லாமல் ஒருபோதும் பாஜக எந்த குற்றச்சாட்டையும் முன்வைப்பதில்லை.

scroll to top