பிரதமரின் தமிழக பயணத் திட்டம் ரத்து

பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் புதிதாக திறக்கப்பட உள்ள 11 மருத்துவக்கல்லூரிகளின் திறப்பு விழாவுக்கு வரும் 12ந்தேதி பிரதமர் மோடி விருதுநகர் வருகை தருவதாகவும், பாஜகவினர் நடத்தும் பொங்கல் விழா, அன்று மாலை புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாகவும்
இருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப பஞ்சாப் சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது வெளிமாநில பயணத்திட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இவற்றை கருத்தில் கொண்டு பிரதமரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

scroll to top