இந்த ஆண்டுக்கான பால புரஸ்கார் விருதுக்கு 14 சிறுமிகள் உள்பட 29 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் விருதுநகரைச் சேர்ந்த மருத்துவ தம்பதிகள் நரேஷ்குமார் சித்திரகலாவின் 8 வயது மகளான விஷாலினிக்கு, வெள்ள சேதங்களின் போது மக்களை பாதுகாக்கும் வகையில் பலூன் வடிவிலான மிதக்கும் வீட்டை வடிவமைத்தற்காக விருது வழங்கப்படுகிறது. 6 வயதிலேயே விஷாலினி இதற்கு காப்புரிமை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையைச் சேர்ந்த 14 வயது அஸ்வதா, புதைபடிமம் எனப்படும் தொல்லுயிரியல் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அரியலூர் உள்ளிட்ட இடங்களில் பல புதைபடிமங்களை கண்டறிந்ய அஸ்வதா, தனது வீட்டிலேயே சிறிய அளவிலான அருங்காட்சியத்தை வடிவமைத்துள்ளார். பள்ளிகளுக்குச் சென்று புதைபடிமங்கள் குறித்து மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் அஸ்வதாவுக்கு சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது வழங்கப்படுகிறது.
இவைதவிர கேலிராபி எனப்படும் கையெழுத்து முறையில் சிறந்து விளங்கியதற்காக, 13 வயது கவுரி மகேஷ்வரி மற்றும் பியோனா வாசிப்பதில் பல்வேறு சாதனைகளை படைத்த சையத் அகமது, உள்ளிட்டோருக்கும் பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.