உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆறுதல்

vc.jpeg

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த மாணவி தனியார் பள்ளியில் படித்து வந்தார்.இம்மாணவி, பள்ளி ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் கோவை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில்  முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடா வுமான  எஸ்.பி.வேலுமணி அவர்கள் உயிரிழந்த மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று மாணவியின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில். உயிரிழந்த மாணவியின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம், தனது மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்பியதில் பாலியல் தொல்லையால் உயிரிழந்த சம்பவம் மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது  கோவை சட்டமன்ற உறுப்பினர்கள்  அம்மன் கே அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராம் உட்பட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டு உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

scroll to top