பாலமேடு பகுதியில் மொச்சைக்காய் சீசன் ஆரம்பம் விலை ரூபாய் 80 விற்பனை

மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் மொச்சைக்காய் போடுவது வழக்கம். இந்த ஆண்டு விளைச்சல் மிக மிக குறைவுதான். விவசாயி
களிடமிருந்து வரவேண்டிய தொகை குறைவாக வருகின்றது. இதனால், விலை ரூபா 65 முதல் 70 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் வாங்குகின்றனர். இவர்கள் ரூ. 80-க்கு விற்பனை செய்கின்றனர். இப்பகுதியில், விளையும் மொச்சை மருந்து அடிக்காமலும், உறவுகளும் இயற்கையாகவே உரம் இடுவதால், ருசியாக இருக்கிறது. ஆகவே, பாலமேடு மச்சான் என்றால் விரும்பி வாங்குவார்கள். கடந்த ஆண்டு இதே நாளில் ரூபா 40, 50 என்ற விலைக்இஉ விற்பனையானது. அப்போது, விளைச்சல் அதிகமாக இருந்ததால், விவசாயிகள் அதிகம் பயிரிட்டு கொண்டுவந்து வியாபாரியிடம் விற்பனை செய்தனர்.
இந்த ஆண்டு, பூப்பூக்கும் நேரங்களை நேரத்தில் கன மழை பெய்ததால், விளைச்சல் குறைவுதான். தொடர்ந்து, விலையேற்றம் ஆகியது. இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி ரூ 100க்கு விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

scroll to top