பாலமேடு ஜல்லிக்கட்டு: முதலமைச்சரை அழைக்க கமிட்டி நிர்வாகம் முடிவு

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு வருகின்ற 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள நிலையில் பாலமேடு கிராமமகாலிங்க சுவாமி படத்துக்கு எம் டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் சோதி தங்கமணி மற்றும் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டு செய்தியாளரிடம் கூறியதாவது : தமிழக முதலமைச்சரை இந்த ஜல்லிக்கட்டுக்கு அழைப்பதற்காக இருக்கிறோம். மேலும், அரசு அறிவுறுத்தலின்படி கொரோனா மற்றும் ஓமக்ரான் பரவுதலையொட்டி அரசு விதிகளின்படி, ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், மேலும் சிறந்த மாட்டுக்கான பரிசு நாட்டு பசு மாடு மற்றும் கன்று குட்டி, மாடுபிடி வீரர்கள் கான முதல் பரிசு கார் ,மேலும் தங்க காசு, டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் உள்பட விலை உயர்ந்த பொருட்கள் மாடுகளுக்கு மாடுபிடி வீரர்களுக்கும் வழங்கப்படும் என்பதை தெரிவித்தனர்.

scroll to top