பாலமேடு அரசு பள்ளியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

WhatsApp-Image-2021-11-27-at-2.37.48-PM.jpeg

மதுரை மாவட்டம், பாலமேடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், நடைபெற்ற வாக்காளர் வரைவு பட்டியலை சரிபார்ப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் அரசு பள்ளிக்கு வருகை தந்து, அங்கு நடைபெற்று கொண்டிருந்த வாக்காளர் வரைவு பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல் மற்றும் பெயர்களை நீக்குதல்உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன்,நகரச் செயலாளர் குமார், உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், சோழவந்தான் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் காளிதாஸ், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி,முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் மதலையப்பன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், நிர்வாகிகள் ராமராஜன்,சேகர்,தாமரை,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

scroll to top