பார்வர்டு பிளாக் சார்பில் ஆர்ப்பாட்டம்

டெல்லி அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம் பெறாததை கண்டித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் அதன் தலைவர் முன்னாள் எம்எல்ஏ கதிரவன் தலைமையில் மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் சிவ பாண்டியன் மாநில செயலாளர் பசும்பொன் தொழிற்சங்க செயலாளர் திருப்பதி உசிலம்பட்டி தேவர் கல்லூரி செயலாளர் வாலாந்தூர் பாண்டியன் வடிவேல் ஆதவன் பாஸ்கர பாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

scroll to top