பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் பலமுறை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது நிலையில், இறுதியாக இவ்விணைப்புக்கான காலக்கெடுவை 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை நீடித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பான் மற்றும் ஆதார் எண்ணை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பான் எண் செயலிழந்துவிடும் என்றும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, வரும் மார்ச் 31-ம் தேதிக்குள், பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்குமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை செய்யாவிட்டால் அவர்களின் வங்கிச் சேவை பாதிக்கப்படும் என்றும், பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என்றும், இணைக்காவிட்டால், பான் எண் செயலிழந்துவிடும் என்றும், குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் எண்ணை பயன்படுத்த முடியாது என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.