பாண்டிச்சேரி குழந்தை மருத்துவ குழுமம் மற்றும் இந்திய குழந்தை மருத்துவ குழுமம் சார்பில் டாக்டர். இராஜேந்திரனுக்கு விருது

Pi7_Image_IMG-20220802-WA0028.jpg

THE KOVAI HERALD

L.Rajagopal,

பாண்டிச்சேரி குழந்தை மருத்துவ குழுமம் மற்றும் இந்திய குழந்தை மருத்துவ குழுமம் பாண்டிச்சேரி சார்பில், ஜிப்மர் மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர். நளினி, டாக்டர். சீனிவாசன், டாக்டர் விஷ்ணு பகத், டாக்டர் மகாதேவன், சிதம்பரம், உள்ளிட்டோரை கௌரவிக்கும் வகையில் இவ்வாண்டு முதல் அவர்களது பெயரில் “NSVMC’ Medal என்ற பெயரில் விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகள் மருத்துவத்தில் குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் சிறப்பாக பணியாற்றியது மற்றும் பல்வேறு அதிநவீன சிகிச்சை முறைகளை செயல்படுத்திய டாக்டர்கள் விருது வழங்கும் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழ்நாடு மட்டுமின்றி யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணியாற்றும்  பல்வேறு குழந்தைகள் மற்றும் சிசு நல சிறப்பு மருத்துவர்கள் குறித்த விபரங்களை வல்லுனர் குழு ஆராய்ந்தனர்.முடிவில் இவ்வாண்டுக்கான “NSVMC’ Medal 2022, விருதுக்கு கோவையை சேர்ந்த குழந்தைகள் மற்றும் சிசு நல சிறப்பு மருத்துவர் டாக்டர் க.இராஜேந்திரன் அவர்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்தனர்.

கொரோனா காலத்தில் 21,300 டாக்டர்கள் மற்றும் 38,400 செவிலியர்களுக்கு பயிற்சி!
விருது பெற்ற டாக்டர் க. இராஜேந்திரன், துறைத் தலைவர், குழந்தைகள் மற்றும் சிசு நல சிறப்பு மருத்துவர், கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை மற்றும் இந்திய குழந்தை மருத்துவ குழுமம் தமிழ்நாடு கிளையின், செயலாளராகவும் உள்ளார்.குழந்தைகள் மற்றும் சிசுநல சிறப்பு மருத்துவம் மட்டுமின்றி கொரோனா காலத்தில் தமிழ்நாடு முழுவதும் 13,500 டாக்டர்கள்,  7,800 முதுநிலை கல்வி மருத்துவ மாணவ,மாணவியர்  மற்றும் 38,400 செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்துள்ளார்.குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் நலனுக்காக தமிழில் ‘குழந்தைகள் நலம்’, ‘தாய்- சேய்க்கன சத்தான உணவுகள்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதி உள்ளார்.இந்த புத்தகங்களை விற்பனை செய்வதால் கிடைக்கும் பணத்தை(இதுவரை 11 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை) ஏழை குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைக்கும்,  மாற்றுத்திறன் குழந்தைகள் சிகிச்சைக்கும் வழங்கி உள்ளார். தொடர்ந்து வழங்கி வருகிறார்.தற்போது பாண்டிச்சேரி குழந்தை மருத்துவ குழுமம் சார்பில் விருது வழங்கிய போது கிடைத்த பத்தாயிரம் ரூபாய் பரிசு தொகையையும் மாற்றுத்திறன் குழந்தைகள் சிகிச்சைக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

scroll to top