பாட்டு பாடி வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 32வது வார்டு கண்ணப்ப நகர் பகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் மகேஸ்வரன். அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர் ஆர்மோனிய இசை கருவியை வாசித்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆர்மோனிய பெட்டியை வாசித்தபடி வீடுதோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் தான் வெற்றி பெற்றால் அப்பகுதியில் உள்ள குறைகள் அனைத்தையும் சரி செய்து தருவேன் எனவும் தெரிவித்தார். இவர் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்பொழுது குதிரையில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

scroll to top