பாஜக தேசிய தலைவர் நட்டாவின் சுற்றுப்பயணம் பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றியை தரும் – அண்ணாமலை

anna2.jpg

​பாஜக தேசிய தலைவர் நட்டாவின் தமிழக சுற்றுப்பயணம் பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றியை தரும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை கோட்டேஸ்வரன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது, “பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மேட்டுப்பாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தில் க்லந்து கொள்ளவுள்ளார். அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். அதன் முதல் பயணத்தை குறிப்பாக, கோவை, நீலகிரியில் இருந்து துவங்கவுள்ளது. பாஜக தேசிய தலைவர் நட்டாவின் தமிழக சுற்றுப்பயணம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றியை தரும். “என்று கூறினார்.

scroll to top