பாஜக உறுப்பினர் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து

Kalyanaram_1200x768.webp

தமிழக பாஜக செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கல்யாணராமன். இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் சாதி, மத மோதல்களை தூண்டும் விதமாக பரபரப்பான தகவல்களையும் பதிவிட்டு, மக்களிடையே வேறுபாட்டை எழுப்பி வந்தார். இதனால், இவர்மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, அவர்மீது காவல்துறை குண்டர் சட்டம் போடப்பட்டது.

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்,  சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாகக் பாஜக பிரமுகர் கல்யாண ராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தது. பின்னர் அவரை மீது காவல்துறை குண்டர் சட்டத்தை பாய்ச்சியது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்யாணராமன் வழக்கு தொடரந்திருந்தார். இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணையை தொடர்ந்து, கல்யாணராமன் மீது காவல்துறை போட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

scroll to top