பாஜக அரசியலில் இருப்பது தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே என்று கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், “திமுக அமைச்சர்களுக்கு உதயநிதியை புகழ்வது தான் ஒரே வேலை. உதயநிதிக்கு தொழில்நுட்பத்துறை மற்றும் திரைத்துறை சார்ந்த அமைச்சகம் தான் பொருத்தமாக இருக்கும்
பாஜக அரசியலில் இருப்பது தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. 2024 தேர்தல் மோடிஜிக்கான தேர்தல். பாஜக சார்பில் 9 புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொடுத்துள்ளோம் அரசின் அழுத்தத்தால் வழக்கு இல்லாமல் போகிறது.
அன்னூர் பகுதியில் ஏற்கனவே தனியார் நிறுவனம் வாங்கி வைத்துள்ள தரிசு நிலம் கையகப்படுத்தப்படும் என்கிற அரசின் அறிவிப்பை பாஜக வரவேற்கிறது. விவசாயம் பற்றி ஆளும்கட்சி உணர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. மேலும் இதில் தவறாக கொடுக்கப்பட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும். நீர், நிலத்தை மாசுபடுத்தாத நிறுவனங்கள் மட்டுமே என அரசு தெரிவித்துள்ளது அதனை திமுக காப்பாற்ற வேண்டும். மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்.”
தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் தமிழக முதல்வர் தான் தமிழக மக்கள் ஒவ்வொரு நாளும் விலைவாசி உயர்வை சந்திக்கின்றனர். கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளது பாஜக தொடர் போராட்டங்களை கையில் எடுக்கும் திமுக அரசு பிரன்ச்சு புரட்சி ஏற்பட்டதற்கு நிகராக உள்ளது. ” என்று பேசினார்.