பாஜகவால் தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை ஆட்சி செய்ய முடியாது.. ராகுல் காந்தி

ragul.jpeg

பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆட்சி செய்ய முடியாது என காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நடைபெற்ற குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி தமிழகத்தில்  உள்ள என் சகோதரரிடம் சென்று  நான் உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்பேன். அவர்கள் அவரது தேவைகளை  என்னிடம் சொல்வார்கள். அதேபோல் எனக்கு தேவையானதை கேட்டு பெறுவேன். இதுதான் கூட்டாட்சி. இந்த விஷயத்தை மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.பாஜக உங்கள் வாழ்நாளில் ஒரு போதும் தமிழக மக்களை ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது. தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை, அவற்றுக்கு மத்திய அரசு மதிப்பு அளித்து சம உரிமை வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

scroll to top