பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரிப் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். தீர்மானத்திற்கு ஆதரவாக 161 உறுப்பினர்கள் உள்ளனர். தீர்மானம் மீது 31ம் தேதி (வியாழக்கிழமை) விவாதம் நடத்தப்படும். விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்மானம் நிறைவேற 342 உறுப்பினர்கள் கொண்ட தேசிய சபையில் 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. நிச்சயம் இந்த ஆதரவை நிச்சயம் பெறுவோம் என்ற நம்பிக்கையில் எதிர்க்கட்சிகள் உள்ளன. அதே வேளையில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 172 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்க முடியும்.
இன்று வாக்கெடுப்பு நடைபெறும் எனச் செய்திகள் வந்த நிலையில் வாக்கெடுப்பு 31 ஆம் தேதி விவாதத்துக்குப் பிறகு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.