பஸ் கண்ணாடியை உடைக்க முயன்ற வாலிபர் கைது

மதுரை கே புதூர் கிளை அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர் வேணுகோபால்.இவர் தத்தனேரி சாலையில் பஸ் ஓட்டி சென்ற போது பஸ்ஸை வழிமறித்த வாலிபர் பஸ் கண்ணாடியை தாக்கி உடைக்க முயன்று விட்டு ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து டிரைவர் வேணுகோபால் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தத்தநேரி பர்மா காலனியை சேர்ந்த கண்ணன் மகன் ரகு ராஜ் 23 என்ற வாலிபரை கைது செய்தனர்.

scroll to top