பழங்காநத்தம் அருகே அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் சகதி- கர்ப்பிணி பெண்கள் வழுக்கி விழும் அவல நிலை

மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள l00-வது வார்டு பைக்ரா பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

இங்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் முதியோர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால், மருத்துவமனை அருகே கால்வாய் உள்ளது தொடர்ந்து மழை பெய்து வருவதால், கால்வாய் நிரம்பி வெளியேறுவதால் மருத்துவமனை முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதாகவும் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், மருத்துவமனை உள்ளே சேறும் சகதியாக உள்ளதால், இங்கு வரும் கர்ப்பிணி பெண்கள் வழுக்கி கீழே விழுந்து விட்டன. இதனால், உயிர்க்கு ஆபத்தான நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவமனை அருகே அப்பகுதியில் குடியிருக்கும் ஒரு சிலர் மாடு வளர்ப்பதால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் வர இயலாத சூழ்நிலை உள்ளது உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சுத்தம் செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

scroll to top