பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு உடற்கல்வி ஆசிரியர் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாண்டுரங்கன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (58). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். நேற்று பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில், ராமகிருஷ்ணன் தூக்கிட்டு இறந்து கிடந்தார். பள்ளியில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்துசென்று, ராமகிருஷ்ணன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன ராமகிருஷ்ணன் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் அதில், மனஉளைச்சல் மற்றும் கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்வதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்று எழுதியுள்ளதாகவும், போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top