பல்கலைகழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவை ஆதரித்து பேரவையில் கட்சி தலைவர்கள் உரை

dc-Cover-00jb1qkcnmb1ss0pn17kin4dj4-20170719194514.Medi-1.jpeg

தமிழகத்தின் பல்கலைகழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மூலம் சென்னை பல்கலை. உள்பட 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து அரசுக்கு மாற்றப்படுகிறது. துணை வேந்தர்களை அரசு நியமிக்க முடியாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியால் துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் இருப்பது மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத துணை வேந்தரை நியமிக்கும் ஆளுநருக்கு வழங்கக்கூடாது என நீதிபதி குழு கூறியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி பூஞ்சி ஆணைய பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என தமிழக அரசு கருத்து தெரிவித்துள்ளது.

ஆளுநர் துணைவேந்தர்களை நியமனம் செய்து வரும் நிலையில், அந்த அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  அந்த மசோதாமீது பேசிய அமைச்சர்  துணை வேந்தர்களை ஆளுநர் நியமிப்பதால் அரசு கொள்கை முடிவு எடுப்பதில் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றும் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார் என்றும் கூறினார்.

scroll to top