பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் டூ கோவை வழித்தடங்களில் 8 ரயில்கள் ரத்து.

பராமரிப்பு பணி காரணமாக 30ந்தேதி முதல் டிசம்பர் 3ந்தேதி வரை சென்ட்ரல் டூ கோவை, எழும்பூர் டூ சேலம் வழித்தடங்களில் 8 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னை எழும்பூரில் இருந்து சேலம் இடையே இரவு 11:55 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் நாளை முதல் டிச.1ஆம் 2ம் தேதி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு மதியம் 2:30 மணிக்கு இயக்கப்படும் ரயில்( 12679) டிசம்பர் 3ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு காலை 6. 10 மணிக்கு இயக்கப்படும் ரயில் (12675) டிசம்பர் 3ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

கோவை சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 3 .15 மணிக்கு இயக்கப்படும் ரயில்( 12676) டிசம்பர் 3ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு காலை 7. 10 மணிக்கு இயக்கப்படும் ரயில்( 12243) டிசம்பர் 3ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது .

கோவையிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 3. 5 மணிக்கு இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில்(12244) டிசம்பர் 3ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

scroll to top