பயங்கர ஆயுதங்களுடன் வாலிபர் கைது பைக் பறிமுதல்

அனுப்பானடியில் பயங்கர ஆயுதங்களுடன் வாலிபரை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர். கீரைத்துறை சப் இன்ஸ்பெக்டர் கண்ணன்.இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அதிகாலையில் மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் பின்புறம் சென்றபோது பைக் ஒன்றுடன் சந்தேகப்படும்படியாக பதுங்கியிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தார். அந்த வாலிபர் தன்பைக்கில் வாள் ஒன்று, அரிவாள் 3 ,சானைக்கல் ஒன்று முதலியவற்றை மறைத்து வைத்திருந்தார். அவற்றை பறிமுதல் செய்து அந்த வாலிபரையும் கைது செய்தார் .அவர் எதற்காக பதுங்கியிருந்தார். கொலை செய்யத் திட்டமா, கொள்ளையடிக்க திட்டமா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top