பனாமா பேப்பர்ஸ் வழக்கு : நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நேரில் ஆஜராக சம்மன்

பனாமா பேப்பர்ஸ் வழக்கில், நடிகை ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 2 முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் 2 முறையும் அவர் தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் இன்றைக்கு அவர் விசாரணைக்கு ஆஜராகுவார் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

scroll to top