கோவையை சேர்ந்த 105 வயதான பாப்பம்மாள் பாட்டிக்கு மத்திய அரசின் பத்ம விருது வழங்கியது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-கார மடை அருகே உள்ள தேவனாபுரம் கிராமம் தான் இந்தப் பாட்டிக்கு பூர்வீகம். கடந்த 1915ஆம் ஆண்டு பிறந்த பாப்பம்மாள், சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து பாட்டி யின் அரவணைப்பில் வளர்ந்தார். அவரின் தந்தை செய்த மளிகைக் கடை தொழிலை பாப்பம்மாளும் சிறுவயதில் செய்யத் தொடங்கியுள்ளார்.20 வயதில் திருமணம் முடிந் துள்ளது. பாப்பம்மாளின் கணவர் ராமசாமி. இவர்களுக்கு குழந்தை இல்லை. கணவர் ராமசாமி கடந்த 1992ஆம் ஆண்டு உயிரிழந் தார். மளிகைக் கடை, ஹோட்டல் என தொழில் நடத்தி வந்த பாப்பம்மாள், அதில் கிடைத்த வரு மானத்தின் மூலம், அப்பகுதியில் விவசாய நிலம் வாங்கியிருக்கிறார். இவர் முதல் முறை 4 ஏக்கர் 29 சென்ட் விவசாய நிலமும் பிறகு 2 ஏக்கர் 7 சென்ட் வாங்கியிருக்கிறார். இப்போது பாப்பம்மாள் கைவசம் இருப்பது 10 ஏக்கர் நிலம். அதில் ஒரு பகுதியை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு விற்றுள்ளார். எனினும் சுமார் 2.5 ஏக்கர் நிலத்தை தொடர்ந்து தன்வசம் வைத்து நிலத்தில் விவ சாயம் பார்த்து வருகிறார்.
நிலம் வாங்கியபோது, சோளம், பல்வேறு வகை யான பருப்பு வகைகள் மற்றும் ஒரு சில பழங்கள் மற்றும் காய்கறிகளை அவர் குடும்பத்திற்காகப் பயிரிட்டு பயன்படுத்தத் தொடங்கினார்.
எனினும் விவசாயத்தை முறையாக கற்க தமிழக வேளாண் பல்கலைக் கழகத்திலும் சேர்ந்தார். இந்த பாப்பம்மாள். கடந்த நூற்றாண்டில், பாப்பம்மாள் இரண்டு உலகப் போர்கள், இந்தியாவின் சுதந்திரம், பல இயற்கை பேரழிவுகள் மற்றும் இப்போது கோவிட் தொற்றுநோய் என பலவற்றைக் கண்டு வாழ்ந்து வருகிறார்.இன்றும் கூட, ஒவ்வொரு நாளும் இந்த பாட்டி தனது நிலத்திற்குச் சென்று அதில் வேலை செய்கிறார். அவரின் இந்த சாதனைகள் காரணமாகத் தான் 105 வயதில் பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது