பட்டாக் கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய இருவர் கைது

arrest.jpg

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குமாரம் கிராமத்தில் மந்தையில், நண்பர்களுடன் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி, கொண்டாடிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை அருகே குமாரத்தை சேர்ந்த ஜெயசூர்யா வயது 18., மற்றும் திருப்புவனத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் வயது 21. ஆகிய இருவர் தன் நண்பர்களுடன், குமாரம் மந்தையில் பிறந்தநாளையொட்டி, பட்டாக் கத்தியால் கேக் வெட்டியதுடன், வாட்ஸ் அப்பில் பரப்பியதாகவும், ஆயூதம் பயன்படுத்தியதாக இருவரையும் அலங்காநல்லூர் காவல்நிலையத்தினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

scroll to top