பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி  டீக்கடை நடத்தும் பெண் மோசடி

.jpg

​கோவையில் பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி  டீக்கடை நடத்தும் பெண் ஒருவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கோவை மாநகர காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் நிரஞ்சனா. இவர் தனது நண்பர்கள் மூலம் தனியாக ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி அரசு துறைகளான பட்டு வளர்ச்சித் துறை ,ஊரக வளர்ச்சித்துறை, பதிவுத்துறை ஆகிய துறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு சில லட்சங்கள் லஞ்சம் தர வேண்டும் எனவும் கூறி பல பட்டதாரிகளிடமும் இரண்டு முதல் ஐந்து லட்சம் வரை வசூல் செய்துள்ளார். பணம் கொடுத்து ஆறு மாதத்திற்குள் அரசு வேலை நிச்சயம் என்று வாக்குறுதி தந்த நிரஞ்சனா இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு வேலையும் வாங்கித் தராததால் சந்தேகம் அடைந்த பணம் கொடுத்த பட்டதாரிகள், நிரஞ்சனாவை நேரடியாக தொடர்பு கொண்டு தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப வழங்குமாறு கேட்டுள்ளனர்.

அப்போது தனக்கு முக்கிய அரசியல் பிரமுகர்களை நன்றாக தெரியும்., தன்னை மிரட்டி பார்த்தால் விளைவுகள் வேறு விதமாக இருக்கும் என நிரஞ்சனா பயமுறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சுமார் 9 பேர் 27 லட்சம் ரூபாய் வரை தங்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக நிரஞ்சனா மீது கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

scroll to top