கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப்பில் பல்வேறு நலத்திட்ட திட்ட பணிகளை அடிக்கல் நாட்டும் வரும்போது, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் பங்கம் விளைவித்து பஞ்சாப் காங்கிரஸ் அரசை க் கண்டித்து இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வநத இந்த நிலையில், மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில், மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன்பு மதுரை மாநகர் புறநகர் பட்டியல் அணித் தலைவர்கள் சரவணன் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரை பாரதிய ஜனதா கட்சி மாநகர தலைவர் டாக்டர் சரவணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில், பாரதிய ஜனதா கட்சி அனைத்து நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.