பஞ்சத்தால் அடிபட்ட வடகொரிய மக்கள்: கிம் ஜோங் உன் பெருமிதம்

-ஜோங்-உன்-e1643799165525.jpg

உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. உலகின் இருண்ட நாடான வட கொரியாவில் கிம் ஜோங் உன்னின் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. தென் கொரியாவை ஒப்பிடும்போது வடகொரியா கடும் உணவுப் பஞ்சம் மற்றும் பொருளாதார நெருக்கடியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிக்கித் தவித்து வருகிறது. தற்போது சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆட்சி குறித்த 110 நிமிடங்கள் ஓடும் ஆவணப்படம் ஒன்று அந்நாட்டில் திரையிடப்பட்டது. ‘சாதனை ஆண்டு 2021’ என தலைப்பிடப்பட்ட இந்த ஆவணப்படத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடகொரியா ஏவுகணை தயாரிப்பு, வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த வடகொரிய கம்யூனிச அரசு மேற்கொண்ட முயற்சி உள்ளிட்ட பல சாதனைகள் திரைமொழியில் ஒன்று சேர்க்கப்பட்டு ஆவணப்படமாக உருவாக்கப்பட்டது. கிம் வழக்கம் போல கைதட்டி தனது சாதனையை தானே ரசித்துக்கொண்டிந்த நிலையில், பஞ்சத்தால் அடிபட்ட மக்கள் வேறு வழியில்லாமல் இந்த ஆவணப்படத்தை கண்டு ரசிக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

scroll to top