பசுமாட்டை கொலை செய்ததாக புகார் பெண் உள்பட 3 பேரிடம் விசாரணை

திருப்பரங்குன்றம் எஸ். ஆர்.வி. நகரை சேர்ந்தவர் பிரபாகரன் 43.இவர் மாடுகள் வளர்த்து வருகிறார்.இவரது மாட்டுக்கொட்டகையில் இருந்த பசு மாடு திடீரென்றுஇறந்து கிடந்தது. இந்த சம்பவம் குறித்து பிரபாகரன்திருநகர் போலீசில் புகார் செய்தார்.புகாரில் பசுமாடு இயற்கையாக இறக்கவில்லை மூன்று பேர் சேர்ந்து கொலை செய்து இருக்கிறார்கள் என்று சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top