திருப்பரங்குன்றம் பசுமலை ராயப்பன் நகரை சேர்ந்தவர் சுரேந்திரன் 47. இவருடைய மகன் ஆறு வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அன்றிலிருந்து சுரேந்திரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். மன வருத்தத்திலும் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி தனலட்சுமி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேந்திரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பசுமலையில் மகன் இறந்த சோகத்தில் தந்தை தூக்கு போட்டு தற்கொலை
