நெல் பயிருக்கு அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கிய கணவன், மனைவி!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நெற்பயிரை சுற்றி தோட்டத்தில் போடப்பட்ட மின்சார வேலியில் மின்சாரம் பாய்ந்து கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படுகாயமடைந்த மனைவியை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இச்சம்பவம் குறித்து, கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமங்கலம் அருகே டி.வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(35). இவருடைய மனைவி அக்கம்மாள்(32). இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். கிருஷ்ணனுக்கு இப்பகுதியிலேயே வயல்காடு உள்ளது. இதில், பருத்தி பயிரிட்டுள்ளார். வழக்கமாக, காலையில் பருத்தி காட்டுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில், கிருஷ்ணன் தோட்டத்து அருகே உள்ள கதிர்வேல் என்பவர் தனது தோட்டத்தில், நெல் பயிரிட்டு உள்ளனர் இதில் காட்டுப்பன்றி அட்டகாசம் செய்வதால், இரவு நேரங்களில் மின்சார வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், இன்று காலை பருத்திக்காடு செல்வதற்காக கிருஷ்ணன் மற்றும் அவருடைய மனைவி அக்கம்மாள் சென்றுள்ளனர். கதிர்வேல் தோட்டத்தில் போடப்பட்டுள்ள மின்சார வேலியில் மின்சாரத்தை அணைக்காமல், இருந்ததால் அந்த வழியாக சென்ற கணவன் மின்சார வேலியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உள்ளது. அவரை காப்பாற்ற முற்பட்ட அவருடைய மனைவி அக்கமாளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில், கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த அக்கமாளை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இச்சம்பவம் குறித்து, கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
நெற்பயிருக்கு போடப்பட்ட மின்சார வேலியில் சிக்கி கணவன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

scroll to top