நெல் கொள்முதல் செய்வதில் லாரி உரிமையாளர்கள் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு

நூற்றுக்கணக்கான லாரிகள் ஒப்பந்தம் செய்யாமல் இயக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சித்
தலைவரிடம் புகார் மனு

மதுரை மாவட்டத்தில் இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளும் நெல் கொள்முதல் செய்ய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது

இதில் பல ஆண்டுகளாக லாரி உரிமையாளர்கள் அரசு ஒப்பந்தம் செய்யாமல் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருவதாகவும் மேலும் ஒரே பதிவு எண்ணை கொண்ட பல லாரிகள் இயக்குவதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ஒப்பந்தம் செய்யாமல் லாரி இயங்குவதால் நெல் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்து வருகிறது.

மேலும் நெல் மூட்டைகளை ஏற்றி வர ஒப்பந்தம் செய்துள்ள கதிரேசன் லாரி உரிமையாளர் உள்பட பலர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக பூசாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

விவசாயிகளிடம் நெல் விளைச்சல் அடைந்து அறுவடை செய்த நெல் மூட்டைகளை ஒப்பந்தம் செய்யப்பட்ட லாரிகளில் ஏற்றி வருகின்றனர்

அப்படி ஏற்றி வரும் நெல் மூட்டைகளை லாரி இடையே மூன்று முதல் ஐந்து நாட்கள் வைத்துவிட்டு அவைகளை தனியார் அரிசி ஆலைகளுக்கு விற்பனை செய்துவிட்டு நீண்ட நாட்களாக தனியார் ஆலைகளில் வைக்கப்பட்டுள்ள பழைய நெல் மூட்டைகளை ஏற்றி நெல் கொள்முதல் செய்யும் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர்

இதனால் விவசாயிகளுக்கு நெல் மூட்டைகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை மேலும் ஒரே பதிவு எண்ணைக் கொண்ட பல லாரிகள் வைத்து லாரி உரிமையாளர்கள் இயக்கி வருகின்றனர்

சில இடங்களில் புதிய நெல் மூட்டை நெல்லுடன் பழைய நெல் மூட்டை நெல் மணிகளை கலந்து லாரி உரிமையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர்

ரேஷன் அரிசி அவசரம் என்று லாரிகளில் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதால் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் அவர்களை உரிய சோதனை நடத்தப்படுவதில்லை எனவே விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வரும் நெல் மூட்டை ஏற்றி வரும் லாரிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

scroll to top