நூலகம் வாருங்கள்  சீரியல் பார்ப்பதை விடுங்கள்- நூலகம் திறப்பு விழாவில் அமைச்சர் கே.கே.எஸ்.எல்.ஆர் ராமச்சந்திரன் பேச்சு

WhatsApp-Image-2021-10-18-at-11.18.26-AM.jpeg

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நூலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய, வருவாய் பேரிடர் மேலாண்மைதுறை  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் .ராமச்சந்திரன், 50 வருடத்திற்கு முன்னாள் பெண்கள் கணவரிடம் கேட்காமல் வர முடியாது. தற்போது, ஆண்கள் அடுப்படியில் உள்ளோம். தற்போது பெண்கள் வெளியில் உள்ளனர்.

பெண்கள் தங்களது திறமையை வளர்த்து கொண்டதால், வெளியில் உள்ளனர். வேலை செய்து  பெண்கள் தங்களது கையால் உயர்ந்து வருகின்றனர். துணை ஆட்சியர் பதவியில் 29 பேர் இருந்தால் அதில் 25 பேர் பெண்கள் .இது எல்லாம் புத்தகம் மூலமாக கிடைத்துள்ளது. எங்களிடம் வரும் 500 மனுவில் 450 பணி கேட்டே வருகின்றனர். தற்போது போட்டி அதிகரித்துள்ளது. திறமை இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்.

நூலகம் வாருங்கள  சீரியல் பார்பதை விடுங்கள். சீரியலில் மாமியார் மருமகள் சண்டைதான் நடக்கிறது. அதை விட்டு புத்தகத்தை படியுங்கள் நூலகத்திற்கு வாருங்கள். நாட்டிற்கு அறிவுள்ளவர்கள்தான் தேவை. இந்த நாட்டை காக்க நல்ல குழந்தைகள் தேவை. நல்ல முதல்வர் கிடைத்துள்ளார். இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் ஸ்டாலின்.
பஸ்ஸில் பெண்களுக்கு தான் இலவசம் எங்களுக்கு இல்லை.

இதைத் தொடர்ந்து, பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும் பொழுது: தமிழகத்தில் 12300 ஊராட்சிகள் உள்ளன அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம் உள்ளது. இந்தியாவில் எங்கும் இல்லாதா அளவிற்க்கு  தமிழகத்தில்  மட்டும் தான் 12300 ஊராட்சிகளிலும் நூலகங்கள் உள்ளது என பேசினார்.

scroll to top