நீர் மோர் பந்தல் திறப்பு விழா – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார்

m.jpg

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் கோடை காலத்தில் இருந்து மக்களை காக்கும் வண்ணம் நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றியச்செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர்கள் அழகுராஜ், குமார், வாடிப்பட்டி அசோக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர், பொதுமக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க
நீர்மோர், சர்ப்பத் இளநீர் மற்றும் தண்ணீர்பழம், அண்ணாச்சிபழம், பலாப்பழம், ரோஸ்மில்க், உள்ளிட்டவைகளை வழங்கினார்.

இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமைசுந்தர், மற்றும் சுந்தரராகவன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் பாஸ்கரன், வார்டு செயலாளர் வெள்ளை கிருஷ்ணன், இணைச் செயலாளர் புளியம்மாள், ஒன்றியக் கவுன்சிலர் ரேவதி, எம்ஜிஆர் இளைஞர் அணி எம்.எஸ். சுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முடுவார்பட்டி மாணிக்கம், ஊராட்சி மன்றத் தலைவர் தீபாநந்தினிமயில்வீரன், மற்றும் நிர்வாகிகள் மனோகரன், ஆறுமுகம் குருணிபாஸ்கரன், வாவிடமருதூர் பிச்சை பாண்டி, முரளி, கேட்டுக் கடை ஆறுமுகம். பெரியஊர்சேரி செந்தில்குமார், கார்த்திகேயன், தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

scroll to top