நீரழிவு சார்ந்த கண் நோய்க்கு உரிய கால அளவுகளில், கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என, மதுரையில் அகர்வால் கண் மருத்துவமனையில் புதன்கிழமை நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில், மூன்றில் ஒருவருக்கு நீரழிவு நோயால் விழித்திரை பாதிக்கப்படுகிறது.
மேலும், நீரிழிவால் மனிதனுக்கு தாற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ கண் பாதிக்கப்படலாம்.
ஆகவே, உரிய கால அளவில் நீரழிவு நோய்கள் கண் பரிசோதனை செய்வது அவசியம் என்றார், மதுரை அகர்வால் கண் பரிசோதனை மைய டாக்டர் திவ்யா.
அவர் மேலும் கூறியது: இந்த மருத்துவமனையில், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச மருத்துவ ஆலோசனையை வழங்கி வருகிறோம். வயது குறைவாக உள்ளவர்களுக்கு, அரை கட்டண சலுகையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
உலக நீரழிவு தினத்தையொட்டி, இந்த மருத்துவமனையில், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு, நவம்பர் மாத இறுதி வரை இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்றார்.