நீதிமன்றத்தில் பொய் வழக்கு தொடுத்தவர் மீது புகார்: போலீஸ் விசாரணை

மதுரை ஜன 30 பெற்ற விபத்து இழப்பீட்டு தொகையை மறைத்து நீதிமன்றத்தில் பொய் வழக்கு தொடர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் தாலுகா எ. கொக்குளம் தெங்கல்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் மகன் பிரபாகரன் 28.இவர் மோட்டார் விபத்தில் சிக்கி 2017 ஆம் ஆண்டு ரூபாய் 2 லட்சத்து 58 ஆயிரத்து தொள்ளாயிரத்து 16 ரூபாய் நீதிமன்றம் மூலமாக தீர்ப்பு வழங்கப்பட்டு இந்தியன் வங்கியின் மூலமாக அவரது கணக்கில் பணம் வர வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு பெற்ற தொகையை மறைத்து தான் இழப்பீடு பெற வில்லை என்று மோட்டார் விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது நீதிமன்றத்திற்கு தெரியவந்தது. இந்த பொய் வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்ற சிராஸ்தார் சாந்தி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top