நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் சினிவாவில் அமலா

ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கணம்’. இந்தப் படம் தெலுங்கில் ஒகே ஒக ஜீவிதம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சர்வானந்த் நாயகனாக நடிக்க, நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை அமலா தமிழ் படத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தின் டீசரை சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார். இந்தப் படம் கால இயந்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.

scroll to top