ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட நீட் சட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இந்த மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவேண்டும். ஆனால் இது வேண்டுமென்றே காலதாமதம் செய்யப்படுகிறது. எனவே, இதை உடனே, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கோவையில் அனைத்து இந்திய மாணவர் பெரு மன்றத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கொவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் துவக்கி வைத்தார்.அவருடன் மாணவர் பெருமன்றத்தின் மாநில நிர்வாகிகள் து.இளையராஜா, சு.பிரசாத், கு.பிரபு, மு.பிரசாந்த் ஆகொயோர் முன்னிலை வகித்தனர்.மாநில துணைத் தலைவர் பா.தினேஷ் வரவேற்றுப் பேசினார்.இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் கொவை மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா. ஜெயக்குமார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வெ.ராம்மூர்த்தி, தந்தைப் பெரியார் திராவிடர் களத்தின் பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மறுமலர்ச்சி தி,மு.க. வின் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் வே.ஈஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவாட்ட செயலாளர்,ஜோ.இலக்கியன், கே.பாலசுப்ரமணியன், வே.வசந்தகுமார், பாபு முருகன், ஆர்.முரளி, உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆறுமுகம் நிறைவுரை நிகழ்த்தினார். ச.பூர்ணிமா நன்றி கூறினார்.இந்தப் போராட்டத்தில் நூறுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
Post Views:
306