நீட் நுழைவுத் தேர்வுக்கான நேரம் அதிகரிப்பு

நீட் நுழைவுத் தேர்வில் கூடுதலாக 20 நிமிடங்கள் நேரம் வழங்கி தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், வெளிநாடுகளிலும் மருத்துவ படிப்புகளில் சேர தகுதித்தேர்வாக நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி மாணவர்கள் தேர்வு மையங்களில் அரை மணிநேரத்திற்கு முன்பாகவே செல்லவேண்டும். அதனைத்தொடர்ந்து தேர்வு எழுத 3 மணிநேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான தேர்வு நேரம் 3 மணி 20 நிமிடங்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 200 கேள்விகளுக்கு, 200 நிமிடங்கள் என்ற அடிப்படையில் இந்த நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

scroll to top