நீங்களும் ஆகலாம் `அதிர்ஷ்டக்காரர்கள்’

Pi7_Image_Career-Steps.jpg

THE KOVAI HERALD:

வாழ்க்கை பயிற்சியாளர் ெஜரோனியோ என்பவர் எத்தகைய சூழ்நிலையையும் கையாளத் தெரிந்தவர்தான் அதிர்ஷ்டக்காரர் என்று கருதப்படுவார் என்று கூறியிருக்கிறார். உங்களுடைய நேர்மறையான எண்ணங்களும், நீங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களும் உங்களை அதிர்ஷ்டக்காராக ஆக்குகிறது.
சிக்கல்களும், கஷ்டங்களும், இடைஞ்சல்களும் எல்லோருக்கும் இருக்கின்றன. அதனையும் மீறி சாதனை படைக்கும் திறமை உள்ளவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள் அவர்கள் சந்தர்ப்பங்களை தேடிக்கொண்டே இருப்பார்கள். கிடைத்த சந்தர்ப்பங்களை பயன் படுத்திக் கொண்டு கடுமையாக உழைப்பார்கள்.
நேர்மையாக உழைக்க வேண்டியது உங்கள் கடமை. முடிவைப் பற்றி கவலைப்படக்கூடாது. எல்லாவற்றையும் அதிர்ஷ்டம் பார்த்துக்கொள்ளும் என்று நினைத்து சோப்பேறித்தனமாக தூங்கிக்கொண்டு இருக்கக்கூடாது. செய்ய வேண்டிய வேலைகளை சந்தோஷமாக செய்ய வேண்டும். வெற்றி கிடைக்கும்போது நன்றியுடன் இருங்கள். எப்போதும் உடல்நலனை பார்த்துக்கொள்ளுங்கள். சரியாக உணவை உட்கொண்டு தேவையான உடற்பயிற்சி செய்து சுகாதார முறையில் இருந்து நேரத்தில் தூங்க செல்ல வேண்டும். எந்த வேலையையும் தள்ளிப் போடக்கூடாது. மனதை எப்போது அமைதியாக வைத்துக்கொள்வது அவசியம்.
அதிர்ஷ்டக்காரர்களை நன்றாக கவனித்துப் பாருங்கள். அவர்கள் நிறைய நல்ல நண்பர்கள் இருப்பார்கள். அவ்வப்போது நல்லவர்களை நண்பர்களாக சேர்த்துக்கொள்ளுங்கள். எளிமையாக இருப்பவர்கள் மன விட்டு தெளிவாக பேசுவார்கள், சந்தர்ப்பங்களை தேடிக் செல்வார்கள். பலரை போய் சந்திப்பார்கள் அவர்கள் வெற்றி கிடைக்கும்போது நன்றியோக நடந்து கொள்வார்கள்.
காலம் மாறுதலுக்கேற்ப தானும் மாரிக்கொண்டு செயல்படுவார்கள். எப்போதும் நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள். நல்ல வெற்றி அடைந்த மக்களின் மத்தியில் இருக்க முயற்சி எடுப்பார்கள். அவர்களுடன் பேசிப்பழகுவார்கள். எல்லா விஷயங்களிலும் தெளிவான முடிவு எடுப்பார்கள். இப்படி எல்லாம் செய்யும் பொழுது முடிவு நன்றாகத்தானே இருக்கும்.
சின்ன சின்ன சந்தர்ப்பங்கள் நம்மை தேடி வரும்பொழுது அதை உடனே அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய நடத்தைதான் நமக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கிறது. அவ்வப்போது நாம் கண்ட வெற்றிகளை பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும். நாளை என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே செயல்பட்டால் மிகவும் நல்லது.
எப்போதும் சந்தோஷத்துடன் சிரித்த முகத்துடன் இருங்கள் அது சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷப்படுத்தும். மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கு எந்த நேரத்தில் உதவி தேவைப்படும் என்று எப்போதும் தெரியாது. நாம் பலருக்கு உதவி செய்தால் நமக்கு உதவி தேவைப்படும்போது பலர் தாமே ஒடி வந்து உதவி செய்வார்கள். மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை யோசித்து பேசுங்கள். யாரிடமும் கடினமாக சொற்களை பேச வேண்டாம். அன்பான வார்த்தைகள் உங்களுக்கு பல வெற்றிகளை கொடுக்கும். இவற்றை அறிந்து தேவையான முயற்சிகளை எடுத்தால் நீங்கள் ஒரு அதிர்ஷ்டக்காரர் கள் உங்களை சார்ந்தவர்களும் அதிர்ஷ்டக்காரர்கள்.

ஏ.ராஜரத்தினம். பொறியியல் மற்றும் மென்திறன் ஆலோசகர்

KAMALA KANNAN S Ph. 92443 17182

scroll to top