ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர், மற்றும் அவரது கணவர் ஊராட்சி செயலர் செய்துள்ள பல கோடி ரூபாய் ஊழலையும் கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊழல் செய்த பணத்தை அவர்களிடம் இருந்து பெற்று மீண்டும் ஊராட்சியில் ஒப்படைக்க வேண்டும் என ,தமிழக முதல்வருக்கு ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊராட்சி நிர்வாகத்தை கண்காணிக்க ஊராட்சி உதவி இயக்குநர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள், விரிவாக்க அலுவலர் ஊராட்சி ஆகியோர் இருந்தும், தவறுகளை கண்காணிக்க, அதிகாரிகள் தவறுவது ஏன், சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
ஊராட்சி நிர்வாகத்தில், தவறுகள் நடந்தால், மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, அப்பகுதி மக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.