நாய் சேகர் வடிவேலுக்கு கிடைக்குமா?

NaaiSekar-71piaqd8vi89f39nrr6cu8j97j6h0zfxpiqs78gvfio.jpg

ஏற்கனவே ‘நாய் சேகர்’ என்கிற படத்தின் தலைப்பு, நடிகர் சதீஷ் நடித்து வரும் படத்திற்கு வைக்கப்பட்டு முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளதாக கூறியதை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் நான் வடிவேலுவின் ரசிகன் என்று சொல்லி ‘நாய் சேகர்’ படத்தின்போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதைதொடர்ந்து ‘நாய் சேகர்’ படத்தின் தலைப்பு சதீஷ் நடிக்கும் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது அதிகார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் பெயர் ‘நாய் சேகர்’ என்று கடந்த இரண்டு வருடங்களாகவே ஒரு தகவல், உலா வந்தாலும் இதனை படக்குழுவினர் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யாமல் இருந்தனர். எனவே, சதீஷை வைத்து ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வரும்காமெடி படத்திற்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்குமென எண்ணி படக்குழுவினர் இந்த தலைப்பை முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து, அந்த பெயரை பெற்றுக் கொண்டனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு மீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ள நிலையில் இந்த தலைப்பு வடிவேலுக்கு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.நகைச்சுவை மட்டுமல்லாமல் பாடி லேங்வேஜ்லயும் அந்த கதாபாத்திரதிற்கும் ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் வடிவேலுக்கு இந்த தலைப்பு கிடைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

scroll to top