நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை ஒன்றில் திடீர் தீ விபத்து

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அறை எண் 59ல் காலை 8 மணி அளவில் பிடித்த தீ கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக தீயணைப்புத் துறையினர் தகவல் அளித்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட போது, பணியாளர்கள் இல்லாததால் யாருக்கும் பாதிப்பில்லை என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

scroll to top