நாடாளுமன்றத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

2022ம் ஆண்டின் நாடாளுமன்ற  முதல் கூட்டத்தொடர் என்பதால் இன்று தொடங்கியது. முதல்கூட்டர் என்பதால், குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த், இரு அவை களின் கூட்டுக்கூட்டத்தில்  நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் 5வது முறையாக இன்று குடியரசு தலைவர் உரையாற்றினார். லோக்சபா அட்டவணையின்படி, காலை 11 மணிக்கு மத்திய மண்டபத்தில் ஜனாதிபதி உரையுடன் அமர்வு தொடங்கியது. அப்போது, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குத் தலைவணங்குகிறேன். சுதந்திரத்தின் 75 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஆளுமைகளையும் நான் மரியாதையுடன் நினைவு கூருகிறேன் என்று தொடங்கினார். இதனைத்தொடர்ந்து,  வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் மற்றும் நேதாஜி 125வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை நினைவுகூர்ந்தார். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டன. இந்தியா கொரோனாவால் கடுமையான சவால்களை சந்தித்தது; இருப்பினும், ஒரே ஆண்டில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதற்கு எனது வாழ்த்துகள் என்று கூறியதுடன், திருக்குறளை மேற்கோள்காட்டி, அவர் எழுதிய ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருக்குறளை குறிப்பிட்டார். அதுபோல, நாட்டின் கல்வித் திட்டங்கள் குறித்து பேசும் பொழுது திருக்குறளை மேற்கோள் காட்டினார்.

scroll to top