நரிக்குறவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது: எம்.பி கனிமொழி பேச்சு

images-52.jpeg

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்கள் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் பாராளுமன்ற திமுக குழுத் துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி அமைச்சர் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து பேசிய கனிமொழி எம்பி, “தமிழக அரசு எடுத்த உரிய நடவடிக்கை காரணமாக, நரிக்குறவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் ஜனநாயக கடமையான ஓட்டுரிமையும் கடந்த தேர்தலில் அளிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகள் கோரிக்கையை அதிமுக அரசு செவி சாய்க்கவில்லை. ஆனால் திமுக ஆட்சி ஏற்பட்டு தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், மாற்றுத் திறனாளிகளுக்கு வேண்டிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவையாவும் `மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை செய்வது, எங்களின் கடமை’ என்ற வகையில் இந்த திமுக ஆட்சி செயல்பட்டு வருவதையே காட்டுகிறது.

scroll to top