நரிக்குடி அருகே அ.முக்குளம் உண்டு உறைவிடப் பள்ளியில் உலக புவி தினம் மற்றும் சட்ட ஆலோசனை விழிப்புணர்வு முகாம்

WhatsApp-Image-2023-04-23-at-16.58.44.jpg

நரிக்குடி அருகே அ.முக்குளத்தில் புவி தினம் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சுரபி அறக்கட்டளை மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக உலக புவி தினம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் ,
அ.முக்குளம் கஸ்தூரி பாபாலிகார உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்றது .

சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர் தலைமை வகித்தார். கிரீன் பவுண்டேஷன் நிர்வாகி பொன்ராம் முன்னிலை வகித்தார். விழாவில் , உலக புவி தினத்தை முன்னிட்டு , மாணவியர்கள் பள்ளி வளாகத்தில்மரக்கன்றுகளை நட்டு வைத்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம். என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மரங்களை வளர்ப்பதில் குழந்தைகளின் பங்கு பற்றி கிரீன் பவுண்டேசன் பொன்ராம், பள்ளி குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து காரியாபட்டி வழக்கறிஞர்கள் சங்க துணை செயலாளர் செந்தில்குமார், குழந்தைகளின் வாழ்க்கை கல்வி மேம்பாடு குறித்து. ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். கிரின் பவுண்டேசன் திட்ட ஒருங்கிணைப்பாளர் இராஜேந்திரன் நன்றி கூறினார்.

scroll to top