‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

சென்னையில் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி அரசுப் பள்ளிகளில் படித்து உயர் நிலைக்கு வந்த மாணவ-மாணவியர், தொழில் முனைவோர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை இந்த திட்டத்தின் கீழ் இணைப்பதன் மூலம் சமூகப் பொறுப்புணர்வு நிதி என்னும் சிஎஸ்ஆர் நிதியை கொண்டு அரசுப் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகளை தொடங்க இலக்கு.


இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், பவுண்டேஷனின் தூதுவர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன், பள்ளிக் கல்வித்துறை சார்ந்த இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

scroll to top