நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான சிவசேனா மனுமீது நாளை விசாரணை

1057560-uddhav-thackeray.webp

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில், சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து, மாநில அரசு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சியான பாஜக ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியது. இதையடுத்து, 30ந்தேதி மாலை 5மணிக்கு  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நாளை சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது.

ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை நாளை (30ந்தேதி) விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

scroll to top