நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக செயல்படுத்தக் கோரி தமிழகஅரசு வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ந்தேதி பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்,  ரூ.86 ஆயிரம் கோடியில் காவிரி – கோதாவரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும், அது தொடர்பாக மாநில அரசுடன் விவாதிக்கப்படும் என அறிவித்திருந்தார். இதைதொடர்ந்து, நேற்று தலைநகர் டெல்லியில் மாநில அரசின் அதிகாரிகளுடன் மத்திய ஜல்சக்தித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கோதாவரி-காவிரி இணைப்பு தொடர்பாக ஒருமித்த கருத்தை நிலைநிறுத்த, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளின் கூட்டத்தை NWDA டெல்லியில் கூட்டியது. இதையொட்டி, ஏற்கனவே 2 முறை காணொளி காட்சி மூலம் விவாதங்கள் நடைபெற்ற நிலையில், நேற்று  டெல்லியி்ல்  மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தில், 3வது கூட்டம்  நேரடியாக நடைபெற்றது.

ஜல் சக்தி அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் குமார், நீர் இருப்பு குறித்த ஒருமித்த கருத்து இல்லாததால், மாநிலங்கள் பரிந்துரைக்கும் மாற்று வழிகளைக் கருத்தில் கொண்டு முன்மொழிவை முன்னெடுப்பதை வலியுறுத்தினார். மத்திய அரசு ஒருமித்த கருத்து மூலம் முன்மொழிவை எடுப்பதில் உறுதியாக உள்ளது என்று பங்கஜ் குமார் கூறினார். தலைமைப் பொறியாளர் (ISWR) மோகன் குமார் மற்றும் பொறியாளர் சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் தெலுங்கானாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். இதில், மாநிலங்களின் ஆலோசனைகள், கருத்துக்கள், திட்டம் பற்றிய சாதக, பாதங்கள் குறித்து கேட்கப்பட்டது. தமிழக அரசின் கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகள்,  காவிரி – கோதாவரியில் உள்ள முக்கிய நதிகளை இணைப்பதால் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் முயற்சியை மேற்கொள்ளக் கூடாது என்றும்,   முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக தெரிவித்து விட்டது. இருப்பினும், புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது. அதனை நிராகரிக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார். இக்கூட்டத்தில் பேசிய கர்நாடகா அரசு அதிகாரிகள்,  நதிகள் இணைப்பு திட்டத்திற்கு கர்நாடகா ஒத்துழைக்கிறது. ஆனால், மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் மாநிலம் சம்பந்தப்பட்ட விவகாரம். இது நீரை சேமித்து வைப்பதற்காக கட்டப்படுகிறது. நதிகள் இணைப்பு திட்டத்துக்காக, அதற்கு தடை விதிக்கக் கூடாது. அதே வேளையில், காவிரி – தென் பெண்ணையாறு இணைப்புக்கு உடன்பட மாட்டோம். அதனால், தமிழகத்திற்கு தான் அதிக நீர் கிடைக்கும். ஒருவேளை இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், கர்நாடகாவுக்கு எவ்வளவு தண்ணீர் ஒதுக்கப்படும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தெலுங்கானா மாநிலத்தின் சார்பில் ஆஜரான அதிகாரிகள், எங்கள் மாநிலத்தில் இருப்பது ஒரே நதிதான். இந்த திட்டத்தால் மற்ற மாநிலங்கள்தான் பயனடையும். இதனால், எங்கள் மாநிலம்தான் அதிக வறட்சியை சந்திக்க நேரிடும். அதனால், நதிகள் இணைப்பு திட்டத்திற்கு நாங்கள் ஒப்புதல் வழங்க மாட்டோம் கோதாவரி நீர் இருப்பு குறித்து முறையான மதிப்பீட்டிற்காக நீரியல் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன்பிறகே இணைப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியது. இந்த கூட்டத்தில் பேசிய ஜல் சக்தி அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் குமார், நீர் இருப்பு குறித்த ஒருமித்த கருத்து இல்லாததால், மாநிலங்கள் பரிந்துரைக்கும் மாற்று வழிகளைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தின் அடுத்தக்கட்டநடவடிக்கைமுன்னெடுப்பதை வலியுறுத்தினார். மத்திய அரசு ஒருமித்த கருத்து மூலம் முன்மொழிவை எடுப்பதில் உறுதியாக உள்ளது என்றும் கூறினார். இதையடுத்து,  4வது கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top